அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கான பரிகாரம் – Astrology In Tamil

அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கான பரிகாரம்

இந்த செய்தியைப் பகிர்க

அரசு வேலைக்கு முயற்சி செய்வர்கள் அந்த முயற்சியுடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் (6am to 7am ) வீட்டு மாடியில (மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும்) ஒரு தீபம் ஏற்றி சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

தீபம் ஏற்றும் போது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு மற்றும் ஏதாவது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும். (கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்க கூடாது. அதை நாமே சாப்பிட வேண்டும்)

அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம். இந்த வழிபாட்டை 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன்கள் கிடைப்பதை காணலாம்.

மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள் :

ஜாதகத்தில் சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால், நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால், பகையாக இருந்தால், மறைந்து இருந்தால், அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள், அதற்க்கு முயற்சி செய்பவர்கள், ஆளுமை திறன் வேண்டுவோர், தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் (யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம்), அரசு வேலைக்கு முயற்சி செய்வோ , அரசு சம்பந்தபட்ட விசயங்களில் இறங்குவோர், கண் பார்வை குறைபாடு உடையவர்கள், அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply