நியூமராலஜியில் நெம்பர் 5 மட்டும் ஏன் ரொம்ப ஸ்பெஷல்… ஐஞ்சுக்குள்ள இவ்ளோ ரகசியம் இருக்கா? – Astrology In Tamil

நியூமராலஜியில் நெம்பர் 5 மட்டும் ஏன் ரொம்ப ஸ்பெஷல்… ஐஞ்சுக்குள்ள இவ்ளோ ரகசியம் இருக்கா?

இந்த செய்தியைப் பகிர்க

எண்கணிதத்தின் படி, ஒரு நபரின் ஆட்சி எண் அவர் வாழ்க்கையில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு எண்ணும் அதற்குரிய தன்மைகளைப் கொண்டிருப்பதால், இதனை புரிந்து கொள்வதன் மூலம் அந்த எண்ணை ஆட்சி எண்ணாகக் கொண்டிருப்பவரின் குணநலன்களை அறிந்து கொள்ள முடியும்.

எண் 5 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டிருக்கும் நபர் சில குறிப்பிட்ட குணநலன்களைக் கொண்டிருப்பார். இந்த குணம் அவரை இதர மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.

ஆட்சி எண்ணைக் கணக்கிடுவது எப்படி?

உங்கள் பிறந்த நாள் 23 என்றால், உங்கள் ஆட்சி எண்கள் 2=3 = 5. மட்டும் உங்கள் பிறந்த நாள் 5, 14, 23 போன்றதாக இருந்தால் உங்கள் ஆட்சி எண் 5.

எண் 5 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டிருக்கும் நபர் சில குறிப்பிட்ட குணநலன்களைக் கொண்டிருப்பார். இந்த குணம் அவரை இதர மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.

எண் 5 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டிருப்பவரின் குணநலன்களை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள். அவர் மற்றவரிடமிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

நாடகத்தன்மை குறைவாக உள்ளவர்

இந்த நபர்கள், யாருமே ஆய்ந்தறியாத தளங்களை ஆராயும் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார். இதன் முடிவாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து விலகும் நிலை உருவாகும்.

இவர்களின் பேரார்வத்தின் விளைவாக நீண்ட நாட்கள் அவர்களுக்கு பிடித்தமானவர்களிடமிருந்து பிரிந்து இருக்கும் நிலை உண்டாகும். ஆனால் அவர்கள் அன்பில் போலித்தன்மை இல்லாத காரணத்தால் இவர்களின் இந்த பிரச்சனை எளிதில் தீரும்.

இன்றைய நாளுக்காக வாழ்வார்கள்:

5 ம் எண்ணை ஆட்சி எண்ணாகக் கொண்டிருக்கும் நபர் எப்போதும் இன்றைய நாளுக்காக வாழ்வார். நாளைக்காக சேமித்து வைக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மாட்டார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைக் கொள்ளாமல் இன்றைய நாளுக்காக மட்டுமே அவர் வாழ்வார். இவர் சிறிதும் பழமைவாதம் இல்லாதவர்.

இந்த நபர் கவர்ந்திழுக்கும் தன்மையுடன் வசீகரத்துடன் இருப்பார். உடலளவில் மிகவும் வலிமையானவர் . மற்றும் வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர் . இதனால் பலரின் இதயத்தைக் கொள்ளைக் கொள்ளும் ஆற்றல் மிகுந்தவர். மற்றவரை எளிதில் கவரும் குணத்தால் , எதிர்பாலினத்தவர் எளிதில் இவர் வசப்படுவார்கள். மேலும் எதற்கும் கவலை கொள்ளாமல் இருக்கும் இவரின் குணம் கண்டு இவரின் துணைவர் , அடிக்கடி கைவிடப்பட்டது போல் உணருவார்.

இவரின் எதிர்மறை குணம்

இந்த நபர் எப்போதும் பொறுமை அற்றவராகவும், படபடப்புடனும் இருப்பார். தினசரி ஒரே வேலையைச் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. மாற்றாக, ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு தாவிக் கொண்டு இருப்பார். ஆனால் எந்த வேலையையும் முழுதாக முடிக்க மாட்டார்.

5 ம் எண்ணுக்குரிய அதிர்ஷ்ட குறிப்புகள்

தனிமம் – பூமி

அதிர்ஷ்ட நாள் – புதன் கிழமை

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

அதிர்ஷ்ட கல் – மரகதம்

அதிர்ஷ்ட எண் – 23

அதிர்ஷ்ட மாதம் – ஜனவரி, மே, ஜூலை

அதிர்ஷ்ட உலோகம் – தங்கம்

அதிர்ஷ்டமான ஆங்கில எழுத்துகள் – F, H, N,X

அதிர்ஷ்ட திசை – வடக்கு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply