வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்கும் பரிகாரங்கள்…!! – Astrology In Tamil

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்கும் பரிகாரங்கள்…!!

இந்த செய்தியைப் பகிர்க

வீட்டில் உள்ள தீய சக்தியை விலக்குவதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து வாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ்வார்கள்.

குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

வீட்டில் உள்ள தீய சக்தியை விலக்க தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.

பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மேற் சொல்லப்பட்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால், அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை காணலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply