ஏழரை சனிக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் – Astrology In Tamil

ஏழரை சனிக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.

” நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும்.”

சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால் 7½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.

சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.

சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம்.

கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும். 10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும்.

உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply