பைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது….? – Astrology In Tamil

பைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது….?

இந்த செய்தியைப் பகிர்க

பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்பு பொடி கலந்த அன்னம் செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை மேம்படும்.

செவ்வாய்க்கிழமை பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

புதன்கிழமை பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயாசம் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்படும் தடைகள் விலகி சிறந்து விளங்கலாம்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு சந்தன காப்பு செய்து புனுகுபூசி தாமரை மலர் அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் அமையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply