தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு – Astrology In Tamil

தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு

இந்த செய்தியைப் பகிர்க

திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது

உப்பை செல்வத்தை அள்ளி தரும் தேவதையான மஹாலட்சுமியுடன் ஒப்பிடுவார்கள். நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது

வெள்ளிக்கிழமை வீட்டில் உப்பு வாங்கி வைத்தால் செல்வம் சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.அதாவது வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்று அர்த்தமாகும்.

நாம் எல்லோரும் நம்மை சுற்றியும் நாம் வசிக்கும் இடத்திலும் தீய சக்திகள் இருப்பதை விரும்பமாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டதை அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

உப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலை விலகி செல்வ செழிப்போடு வாழ வழி வகுக்கும்.

1 இம்முயற்சியை ஞாயிறுகளில் மட்டும் செய்ய வேண்டாம். இந்த முயற்சியை செய்ய நீங்கள் கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம்.

2. ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும்.இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யும்.

3 உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.

4.சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.

5. சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க உதவும்.

6 குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply