கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம் – Astrology In Tamil

கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்

இந்த செய்தியைப் பகிர்க

ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று,

“பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் ஸ்ரீ காம தேநுவே”

என்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply