ஆளுமை எண் என்றால் என்ன? ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா? – Astrology In Tamil

ஆளுமை எண் என்றால் என்ன? ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

நியூமராலஜி என்பது உங்கள் வாழ்க்கை மற்றும் அதன் திசையைப் பற்றி நிறைய வெளிப்படுத்தக்கூடிய ஒரு அறிவியல் கலை ஆகும். நம்முடைய தலைவிதியை நிர்ணயிப்பதில் நமது பிறந்த நாள் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமை எண்ணும் உங்களின் பிறந்தநாளில் இருந்துதான் வரையறுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு உங்களின் பிறந்த நாள் 1 ஆம் தேதியில் இருந்தால் உங்களின் ஆளுமை எண் 1 ஆகும். ஒருவேளை உங்களின் பிறந்த நாள் 13 ஆக இருந்தால் உங்களின் ஆளுமை எண் 4 ஆகும். உங்களின் ஆளுமை எண் உங்களுடைய வாழ்க்கையின் மீது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, அதனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆளுமை எண் 1

எந்தவொரு பிரச்சனையிலிருந்தும் சவாலிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்காத பிடிவாதம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நபராக இவர்கள் இருப்பார்கள். இந்த எண் சூரியனால் ஆளப்படுகிறது, இவர்களை பெரும்பாலான மக்கள் சிறந்த உரையாடலாளர்களாக கருதுகின்றனர். தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும்போது அனைத்து முடிவுகளையும் தங்களுக்கு சாதகமாக இவர்களால் மாற்ற முடியும்.

ஆளுமை எண் 2

கற்பனை, கருத்தியல் மற்றும் மென்மையான இவர்கள் இயற்கையை நேசிக்கிறார்கள், பெரும்பாலும் இவர்கள் மோதலில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமை இவர்களிடம் உள்ளது. இந்த ஆளுமை எண்ணை கொண்டவர்களிடம் மற்றவர்கள் தயங்காமல் உதவி கேட்பார்கள், ஏனெனில் இவர்கள் அனைவரிடமும் அக்கறையாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.

ஆளுமை எண் 3

கலையில் ஆர்வம் அதிகமுள்ள இவர்கள் மிகவும் சுவாரஸ்யமானவர்கள் அதேசமயம் கதை சொல்லுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் பெண் அதிர்ஷ்டம் உங்களைப் பின்தொடர்வதால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இந்த நபர்கள் தங்கள் கருத்தை முன்னிலைப்படுத்த மிகைப்படுத்தக்கூடிய ஒருவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

ஆளுமை எண் 4

ஆளுமை எண் 4 ஆக இருப்பவர்கள் மிகவும் வலிமியானவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை புத்திசாலிகளாகவும், அனைத்தும் தெரிந்தவர்களாகவும் நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுத்து எதனையும் செய்ய முயலமாட்டார்கள், எதிலும் பாதுகாப்பையும், வசதியையும் எதிர்பார்ப்பார்கள்.

ஆளுமை எண் 5

ஆளுமை எண் 5 ஆக இருப்பவர்கள் தலைவர்களாக இருப்பார்கள், இவர்கள் சமூக அக்கறையுடன் இருப்பதுடன், மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதை இவர்கள் முக்கிய வேலையாக நினைக்கிறார்கள். அவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள், சாகசக்காரர்கள் மற்றும் மக்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள்.இவர்கள் மிகவும் புதிரானவர்கள், இவர்களை சார்ந்திருப்பது ஆபத்தான ஒன்றாகும்.

ஆளுமை எண் 6

சிறந்த படைப்பாற்றலும், புத்திசாலித்தனமும் கொண்டவர்கள், இவர்கள் மிகவும் ரசனை மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவ இவர்கள் எப்போதும் முன்வருவார்கள், மற்றவர்களுக்கு தங்களின் உதவி தேவைப்படும் போது தயங்கமால் உதவுவார்கள். மற்றவர்கள் தங்களுக்கு பிடித்த உயரத்தை அடைவதை கண்டு இவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மனதளவில் அமைதியான இவர்கள் அனைத்திலும் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆளுமை எண் 7

இந்த எண்ணை ஆளுமை எண்ணாக கொண்டவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான நபரை தேர்ந்தெடுப்பதில் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை முதல் பார்வையிலேயே இவர்கள் கண்டறிந்து விடுவார்கள். இவர்கள் உண்மையை விரும்புபவர்கள், ஆழமான கருத்துக்களை உடையவர்கள், அனைத்திலும் இருக்கும் அனுபவத்தை விரும்புவார்கள்.

ஆளுமை 8

ஆளுமை எண் 8 கொண்டவர்கள் லட்சிய மற்றும் போட்டித்தன்மை வாய்ந்தது, ஆனால் பொதுவாக இது அவர்களின் நல்ல இயல்புதான். இவர்கள் அனைத்திலும் ஒரு யோசனையின் படி செயல்படுவார்கள், திட்டங்களை கற்பனை செய்வதிலும் அதை நிறைவேற்றுவதில் மிகச் சிறந்தவர்கள், எந்தவொரு செயலையும் தனிஆளாக சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

ஆளுமை 9

இயற்கையாகவே வசீகரமான இவர்களிடம் ஒரு தத்துவஞானி ஒளிந்திருப்பார். நீங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களை நன்கு அறிந்திருக்கிறீர்கள், மேலும் இயற்கையிலும் தத்துவவாதிகள்.இரக்கமுள்ள, அன்பான, ஆன்மீக மற்றும் நல்லிணக்கத்தைத் தேடும் இவர்கள் இயல்பாகவே உங்கள் வழியைப் பின்பற்ற மக்களை ஈர்க்கிறீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply