இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்…. பார்த்து உஷாரா பழகுங்க…! – Astrology In Tamil

இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்…. பார்த்து உஷாரா பழகுங்க…!

இந்த செய்தியைப் பகிர்க

இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் மற்றவர்களின் மீது அன்பாக இருக்க வேண்டும் என்றுதான் படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரும் மற்றவர்கள் மீது அன்பாக செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். சாதி, மதம், மொழி, நாடு என மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. இந்த வெறுப்பு இல்லாத சமுதாயமே மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்கும்.

மற்றவர்களின் மீது வெறுப்பு காட்டுவது நமக்கு மிக எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதனை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். காரணமே இன்றி மற்றவர்கள் மீது வெறுப்புக் காட்டுவது மிகவும் தவறான செயலாகும். சிலரோ அனைவரின் மீதும் வெறுப்பை செலுத்துவார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் மீது அதிக வெறுப்பை உமிழ்வார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வெறுக்க மாட்டார்கள் ஆனால் பார்ப்பதற்க்கு அவர்கள் வெறுப்பது போலவேத் தோன்றும். உங்களை வெறுக்கும்போதோ அல்லது தவிருக்கும்போதோ அவர்கள் மனசாட்சி இன்றி நடந்து கொள்வார்கள். திடீரென உங்கள் தனுசு ராசி நண்பர் உங்களின் தொடர்பை துண்டித்துவிட்டால் அவர்கள் உங்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். உங்களை விட்டு அவர்கள் விலகி சென்றிருப்பார்கள். இவர்களின் வெறுப்பு பற்றிய எண்ணமானது மிகவும் பெரியதாகும். இவர்கள் வெறுப்பதிலேயே நீண்ட காலத்தை செலவழிக்க மாட்டார்கள். உங்களை மறந்துவிட்டு தங்கள் வேலையை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அளவிற்கு யாராலும் வெறுக்க முடியாது. அவர்கள் மற்றவர்கள் மீது அன்பும், அக்கறையும் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள், ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இருக்காது. சிறிய காரணங்களுக்காக கூட மற்றவர்களின் மீது விமர்சனத்தையும், வெறுப்பையும் கொட்டுவார்கள். இவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது, மற்றவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் மிகவும் ஈகோ கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்வது எப்பொழுதும் சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்ற எண்ணம் இருக்கும். தான் வெறுப்பவர்களை மரணித்தவர்களாக இவர்கள் நினைப்பார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் போர்க்களத்தில் இருக்கும் போர்வீரனை போன்றவர்கள். அவர்களின் வெறுப்புப் பார்வை அனைவரின் மீதும் விழும். மக்கள் அனைவரும் பூமிக்கு பாரமாக இருக்கிறார்கள் என்ற வெறுப்புணர்வு இவர்களுக்குள் இருக்கும். இவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவதை விரும்புவார்கள் ஆனால் அதற்கான முயற்சி எதுவும் செய்யமாட்டார்கள். காதலா அல்லது வெறுப்பா என்று சிந்திக்கும்போது இவர்களின் கை வெறுப்பைதான் தேர்ந்தெடுக்கும். மற்றவர்கள் மீது அளவில்லா வெறுப்பை கொட்டுவதில் இவர்களுக்கு இணை இவர்கள் மட்டுமே.

சிம்மம்

காதலில் மிகச்சிறந்தவர்கள் என்று அழைக்கப்படும் சிம்ம ராசிக்காரர்கள் வெறுப்பதிலும் மிகச்சிறந்தவர்கள் ஆவர். ஒருவரை முழு எதிரியாக நினைப்பதற்கு இவர்கள் நீண்ட நேரம் தேவைப்படாது. சொல்லப்போனால் அந்த சந்தர்ப்பத்திற்காக இவர்கள் காத்திருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உங்களுக்கு எதிரியாகி விட்டால் அவர்களுக்கு நீங்கள் ஒரு பொருட்டே அல்ல, உங்களை ஆழ்மனதில் இருந்து வெறுத்து உங்களை எதிர்க்க தொடங்குவார்கள். இவர்களை கண்டு நீங்கள் அஞ்சித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இவர்கள் வெறுக்கத் தொடங்கியபிறகு இரக்கம் காட்டமாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெறுப்பு என்பது குறிப்பாக சக மனிதர்களின் மீதான வெறுப்பு என்பது உணவைப் போன்றதாகும். இவர்கள் தங்கள் வெறுப்பை நன்கு நிர்வகிக்கிறார்கள், மேலும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவர்களுக்கு நன்குத் தெரியும். பழிவாங்கும் எண்ணம் இவர்களுக்கு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். தங்களின் வெறுப்பைக் காட்டவும், பழிவாங்கவும் இவர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருப்பார்கள். பழிவாங்குவதற்காக வன்முறையில் இறங்குவதற்கு கூட இவர்கள் தயங்க மாட்டார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அனைவரையும் வெறுப்பதற்காக பிறந்தவர்கள் குறிப்பாக தங்களை தாங்களே அதிகம் வெறுப்பார்கள். இவர்கள் வெறுப்பை பேச்சிலோ, செயலிலோ காட்டமாட்டார்கள், எனவே இவர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு எப்பொழுதும் குழப்பத்தை ஏற்படுத்தும். தவறாக நடக்கும் எதற்கும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மிகவும் கொடூரமாக வெறுக்கிறார்கள், தங்கள் மீது அனைவருக்கும் பொறாமை என்று இவர்கள் எண்ணுவார்கள். தங்களிடம் இல்லாதது மற்றவர்களிடம் இருக்கும்போது அவர்களை அதிகம் வெறுப்பார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply