ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்…? – Astrology In Tamil

ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்…?

இந்த செய்தியைப் பகிர்க

புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான் ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது. அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் சிறப்பு பலன்களை தருகிறது எனப்படுகிறது.

வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

செவ்வாய் ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும் துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு துர்க்கையை வழிபடுவது நற்பலன்களை தருகின்றன.

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்.

மேலும் ஆன்மிகச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply