பச்சைக் கற்பூரத்தை நம்முடன் வைத்துக்கொள்வதால் நேர்மறை சக்திகள் கூடுமா…? – Astrology In Tamil

பச்சைக் கற்பூரத்தை நம்முடன் வைத்துக்கொள்வதால் நேர்மறை சக்திகள் கூடுமா…?

இந்த செய்தியைப் பகிர்க

எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஓர் பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. பச்சை கற்பூரத்திற்கு பண வசியம் செய்யும் தன்மை இருகின்றது. அதாவது பச்சை கற்பூரம் சிறிய துண்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

பச்சைக் கற்பூரத்தை சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு. பலகாரத்தில் பூஞ்சைகள் வராமல் இருக்க இதனை பயன்படுத்துவார்கள். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இந்த இரண்டு பொருள்களை வைத்துக் கொண்டால் நேர்மறை சக்திகள் கூடும், மேலும் பணப்புழக்கம் அதிகமாவதோடு தெய்வீக சக்திகளை வரவைக்க செய்யும் ஒரு அற்புத பொருளாக இருக்கிறது.

பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இந்த இரண்டு பொருள்களையும் பணப்பெட்டியில் வைத்துக் கொண்டால், நம் வீட்டில் செல்வம் பெருகும். மேலும் இதனுடன் துளசி, கிராம்புவையும் சேர்த்து வைக்கலாம்.

இதனை தண்ணீரில் கரைத்து பூஜை அறையிலும் தெளித்து விடலாம் அல்லது இதனை ஒரு டப்பாவில் போட்டும் வைக்கலாம்.

இயல்பாகவே ஹோமத்துக்கு வைக்கும் பொருட்கள் சக்தியளிக்கும். அதிலும் பச்சை கற்பூரம் மகத்துவம் அதிகம். வீட்டில் ஒரு கிண்ணத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதை வீடு முழுக்க தெளித்து விட்டால் வீட்டில் இருக்கும் பீடைகள் போக்கும் நன்மைகள் பெருகும்.

மேலும் ஆன்மிகச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply