இன்றைய ராசிப்பலன் – 05.10.2019 – Astrology In Tamil

இன்றைய ராசிப்பலன் – 05.10.2019

இந்த செய்தியைப் பகிர்க

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

இன்றைய பஞ்சாங்கம்

05-10-2019, புரட்டாசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 09.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சனிப்ரீதி நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புது முயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.

கன்னி

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.

துலாம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் நண்பர்கள் உதவியால் அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள்.

தனுசு

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மன உளைச்சல்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை சுடும். உடனிருப்பவர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது.

மேலும் ஆன்மிகச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply