மஹாபாரதப்போரில் அர்ஜுனன் மகன் யார் தெரியுமா? இறுதிப்போரில் நடந்தது என்ன? – Astrology In Tamil

மஹாபாரதப்போரில் அர்ஜுனன் மகன் யார் தெரியுமா? இறுதிப்போரில் நடந்தது என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

இன்று உலகில் இருக்கும் பல மாற்றங்கள் மகாபாரத்தில் இருந்து தொடங்கியதுதான். குறிப்பாக ஆண் மற்றும் பெண் என மட்டுமே இருந்த கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் தோன்றியது மகாபாரதத்தில் இருந்துதான். அதற்கு காரணமாக இருந்தது அர்ஜுனனின் மகன் அரவான்தான். திருநங்கைகளுக்கும்,மகாபாரதத்திற்கும் இருந்த தொடர்பு என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அரவான்: மகாபாரதம் என்றவுடன் கிருஷ்ணர், பாண்டவர்கள்,திரௌபதி, கௌரவர்கள், கர்ணன் போன்றவர்களின் நினைவே நமக்கு முதலில் வரும். ஆனால் பாண்டவர்களின் வெற்றிக்காக எண்ணிலடங்கா உயிர்கள் போரில் மடிந்தன. ஆனால் அதற்கு ஆரம்ப புள்ளியாய் இருந்தது அரவான்தான். இவரின் பரம்பரையில் இருந்துதான் திருநங்கைகள் தோன்றியதாக கூறப்படுகிறது. அதனால்தான் திருநங்கைகள் அரவாணிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அரவானின் சோகக்கதை: மகாபாரதத்தின் மிகவும் சோகமான கதை என்றால் அது அரவானின் கதைதான். ஏனெனில் அரவான் தர்மம் ஜெயிப்பதற்காக தன் உயிரையே கொடுத்தார். ஆனால் இறக்கும் முன் அவர் தன் பரம்பரையை வளர்த்ததன் மூலம் தன் இருப்பை மனிதகுல வரலாற்றில் ஏற்படுத்தினார். அவரின் முழுமையான கதையை மேற்கொண்டு பார்க்கலாம்.

அரவான் யார்? மகாபாரதத்தின் மாபெரும் வீரர்களில் ஒருவர் அரவான் ஆவார். அர்ஜுனன் மற்றும் நாக உலகத்தின் இளவரசி உலுப்பிக்கு மகனாக பிறந்தவர்தான் அரவான். கூத்தாண்டவர் என அழைக்கப்பட்ட அரவான் தன் தந்தையை போலவே அரவானும் மிகப்பெரிய வீரனாக இருந்தார். தன் தந்தை மற்றும் இதர பாண்டவர்களுடன் சேர்ந்து குருஷேத்திர போரில் கலந்து கொண்டார். மற்ற அனைவரையும் விட இவரின் தியாகமே மிகசிறந்ததாக கருதப்படுகிறது.

அரவானின் தியாகம்: அரவானை பற்றி பெருந்தேவனார் வெண்பாவில் 9 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழ் வடிவ மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் போருக்கு முன் செய்யப்படும் சடங்கான ‘களப்பலி’ பற்றி கூறப்படுகிறது. இந்த சடங்கை செய்பவர்கள் போரில் நிச்சயம் போரில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

வீரமான போர்வீரர்: இந்த சடங்கின் படி படையின் மிகசிறந்த வீரர் ஒருவர் தனது உயிரை காளி தேவிக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டும், இவ்வாறு கொடுப்பவரின் படை நிச்சயம் வெற்றி பெறும். இந்த சடங்கிற்காக அரவான் தன் உயிரை கொடுக்க முன்வந்தார். வரங்கள்
பெருந்தேவனார் வெண்பாவில் கூறியுள்ளபடி கிருஷ்ணர் அரவானின் மாபெரும் தியாகத்திற்காக வரம் கொடுத்தார். அதன்படி அரவான் இறந்தாலும் 18 நாள் போரையும் பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டார். அந்த வரம் வழங்கப்பட்டது.

அடுத்த வரம்: இந்த வரம் நாட்டுப்புற கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய அடுத்த வரமாக அரவான் தியாகத்திற்கு முன்னாடி தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதன்மூலம் தனது இறுதி சடங்குகளை செய்யும் உரிமையை தன்னை மணந்து கொள்பவருக்கு வழங்க எண்ணினார்.

யாரும் தயாராயில்லை: திருமணம் செய்த உடனேயே விதவை ஆக வேண்டும் என்ற பயத்தில் யாருமே அரவானை திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை. இந்த சிக்கலை தடுக்க கிருஷ்ணர் தன் பெண் உருவமான மோகினி வடிவை எடுத்து அரவானை மணந்து கொண்டு அந்த இரவை அவரோடு கழித்தார். இதன்மூலம்தான் திருநங்கைகள் உருவானதாக கூறப்படுகிறது. கூவாகம்
கூவாகத்தில் கூறியுள்ளபடி அரவானின் தியாகத்திற்கு பிறகு மோகினி ஒப்பாரி வைத்து அழுததாகவும், அரவானின் இறுதி சடங்கு முடிந்த பிறகுதான் தன் உண்மையான உருவத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

அரவான் மற்றும் மோகினி: அரவான் மற்றும் மோகினியின் திருமணம், அரவானின் மரணம், மோகினியின் விதவை கோலம், ஒப்பாரி இவையே கூவாகத்திற்கு அடிப்படையாக அமைந்தது. சித்திரை மாதம் 18 ஆம் நாள் திருநங்கைகள் கொண்டாடும் கூவாக திருவிழா அரவானின் இறப்பிற்காக கொண்டாடப்படுவதுதான். அரவான் மற்றும் மோகினியின் திருமணம் போலவே அவர்களும் தாலி காட்டி கொண்டு அரவானின் மரணத்திற்கு பிறகு மோகினி செய்தது போலவே விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply