இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்… ஜாக்கிரதையா இருங்க… – Astrology In Tamil

இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்… ஜாக்கிரதையா இருங்க…

இந்த செய்தியைப் பகிர்க

இந்த உலகத்தில் அனைவருக்குள்ளுமே ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். ரகசியங்கள் எப்பொழுதும் ரகசியங்களாகவே இருக்க வேண்டும். அதுதான் ஒருவரின் வாழ்க்கைக்கு நல்லதாகும். இதற்கு மாறாக தனது ரகசியங்களை பிறரிடம் கூறுவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதை போன்றதாகும். நமது ரகசியங்களை நம்மாலே ரகசியங்களாக வைத்து கொள்ள இயலாமல் மற்றவர்களிடைம் கூறும்போது மற்றவர்கள் எப்படி அதனை ரகசியமாக வைத்திருப்பார்கள்.

இதைவிட மோசம் அந்த ரகசியங்கள் நமக்கு எதிராகவே திரும்புவதுதான். நாம் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி நமது ரகசியங்களை கூறும்போது அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதனை உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு போட்டிதான் எல்லாமே, எனவே வெற்றி பெறுவதற்காக அவர்கள் சில குறுக்கு வழிகளை கூட பயன்படுத்துவார்கள். அவர்கள் விஷயங்களை மழுங்கடிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர், துரதிர்ஷ்டவசமாக, அதற்காக சில சமயம் உங்களின் ரகசியங்களை அதற்காக பயன்படுத்துவார்கள். உங்களின் ரகசியங்களை கூறுவது அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அதனை போட்டிக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவுதான். மற்றவர்களை விட தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்த இவர்கள் எதையும் செய்வார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும், பழிவாங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களை காயப்படுத்தியவர்களை பழிவாங்க நினைத்தால் அதற்காக அவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், ரகசியங்களையும் பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் அவர்கள் தங்கள் செயலை எப்போதும் நியாயப்படுத்த முயலுவார்கள். அவர்களை காயப்படுத்தாத வரை அவர்கள் ஒருபோதும் பிறரின் நம்பிக்கையை சிதைக்க மாட்டார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் முன்கூட்டியே கணிக்க கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தனக்கான பாடங்களாகவும், நம்பிக்கையாகவும் ஏ எடுத்து கொள்வார்கள். நீங்கள் செய்கிற ஒரு காரியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், மேலும் நீங்கள் செய்வதை தடுத்து நிறுத்த உங்களின் ரகசியங்களை பயன்படுத்துவார்கள். இவர்கள் ஒன்றும் நீதிபதி அல்ல என்பதை இவர்களுக்கு அடிக்கடி நினைவூட்ட வேண்டும்.

சிம்மம்
உங்களின் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான ராசிகள் சிம்ம ராசிக்காரர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவது போல தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்களுக்கு அவர்களே உங்களை வைத்து உதவி கொள்வார்கள். அவர்களுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மட்டுமே உதவுவார்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஏன் தனது சுயநலத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் வார்த்தைகளில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள். மேலும் தங்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் தவறானவர்கள் அல்ல, சிந்திக்க தெரியாதவர்கள் மட்டுமே. மேலும் தங்களை தாங்களே அழித்து கொள்வார்கள். மற்றவர்களை பழிவாங்குவதற்கோ அல்லது அழிப்பதற்கோ பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கே தெரியாமல் இதனை செய்துவிடுவார்கள்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply