இந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? – Astrology In Tamil

இந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

இந்த செய்தியைப் பகிர்க

புதிய ஆண்டான 2018-ல் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போது 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். நம்மில் பலருக்கும் என்ன தான் ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம் ராசிக்கு அந்த ஜாதகம் என்ன தான் சொல்ல வருகிறது என்பதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

இதனால் தான் பலரும் காலையில் எழுந்ததும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராசிப்பலன்களைப் பார்க்கிறோம். ஒருவரது ராசியைக் கொண்டு எப்படி தின பலனைப் பார்க்கலாமோ, அப்படித் தான் ஒருவரது ராசியைக் கொண்டு மாத பலனையும் காண முடியும்.

இக்கட்டுரையில் 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் எந்த ராசிக்கு எப்படி இருக்கும், என்ன நன்மை விளைய போகிறது, எம்மாதிரியான சூழ்நிலை இருக்கும் என்பன போன்ற விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, உங்களுக்கான பிப்ரவரி மாத ராசிப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
காதலுக்கும் ரொமான்ஸுக்கும் பேர் போன பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் தீவிரமாக ஈடுபடமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கையில் எவ்வித தடையுமின்றி செல்வார்கள். இந்த ராசிக்காரர்களைக் கட்டுப்படுத்த சிலர் முயற்சித்தாலும், அவர்களை அவர்களது போக்கில் விட்டுவிட வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த வகையில் இந்த மாத தொடக்கம் அமைந்திருக்காது. மாதத்தின் ஆரம்ப காலத்தில், இவர்கள் செய்யும் அனைத்தும் குழப்பத்திலேயே முடியும். ஆனால், மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் அனைத்தும் இவர்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். முக்கியமாக இந்த மாதத்தின் இறுதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தின் முதல் பாதியில் தென்றல் வீசும்படி இருக்கும். இவர்களது வாழ்க்கை மிகவும் ரொமன்டிக்காகவும், சிறப்பாகவும் செல்லும். மாதத்தின் கடைசியில் வாழ்க்கையானது போராட்டம் நிறைந்ததாக, என்ன தான் முயற்சித்தாலும் தோல்வியில் தான் முடியும். நடக்க வேண்டுமென இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. எனவே தோல்வி அடைந்தால், அதைச் செய்வதற்கு மீண்டும் முயற்சிக்காதீர்கள்.

கடகம்
பிப்ரவரி மாதத்தின் முதல் 2 வாரங்கள் அதிக டென்சன் மற்றும் மன வருத்தத்திற்கு உள்ளாகக்கூடும். வீடு மற்றும் தொழிலில் பணப் பிரச்சனைகள் வரக்கூடும். முக்கியமாக துணையுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். ஆனால் இந்த மாதத்தின் கடைசியில் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருத்த தொழில் வாய்ப்புக்கள் தேடி வரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் வீசும். இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் சில கம்யூனிகேஷன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றபடி இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மென்மையாகவும், அமைதியாகவும் செல்லும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காதலும், ரொமான்ஸும் நிறைந்த நல்ல மாதம். இவர்கள் தங்களது தேவையையும் மற்றும் ஆசையை தெரிவிப்பார்கள். அவர்களின் நண்பர்கள் இவர்களது தோள்களில் சாய்ந்து கொள்ள விரும்பும் நேரமாக இது இருக்கும். மறுபக்கம், வாக்குவாதங்கள் ஒரு நல்ல புரிதலுக்கு வழிவகுக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது ரோலர் கோஸ்டரில் பயணித்தது போன்று இருக்கும். அதாவது இந்த மாதம் சந்தோஷங்களும், துன்பங்களும் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், துன்பத்தில் மூழ்விடாமல் இருக்க, சந்தோஷத்தை இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது அதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இம்மாதம் உடன் வேலைப்புரிவோருடன் சேர்ந்து புதிய புராஜெக்ட்களை ஆரம்பிக்க ஏற்ற சிறப்பான மாதம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது, தான் வேலை செய்வதற்காகவே பிறந்தது போன்று உணர வைக்கும். தனிப்பட்ட உறவில் கூட நாட்டம் காட்டாமல், எந்நேரமும் வேலையைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வைக்கும். இதனால் இந்த மாதத்தின் கடைசியில், இவர்களது உழைப்புக்கான நல்ல தீர்வு கிடைத்து, அலுவலகத்தில் நல்ல பெயரைப் பெறுவர். இருப்பினும் இவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க, சிறிது மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.

தனுசு
இந்த மாதத்தில் தனுசு ராசிக்காரர்கள் இதயத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே தீர்வு எடுக்க முடியாமல் திணறுவார்கள். இந்த மாதத்தில் இவர்கள் ரொமான்ஸ் செய்வதில் கில்லாடிகளாக இருப்பர். இவர்கள் கற்பனைவளம் மிக்கவராகவும் மற்றும் உடல் ஆற்றல் மிக்கவராகவும் இருப்பர். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பணத்தால் மிகவும் மோசமாக வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். உறவுகளை மதிப்பவராக இருந்தால், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் போனஸ் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொடிகட்டிப் பறக்கும் மாதமாக இருக்கும். இவர்களது சமூக மற்றும் காதல் வாழ்க்கை ஆச்சரியமிக்கதாகவும், நகைச்சுவைமிக்கதாகவும் இருக்கும். இவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்து, நட்சத்திரமாக திகழ்வர். இம்மாதத்தில் வரும் பிரச்சனைகளை ஒதுக்கி வைக்காமல், உடனே அதற்கு தீர்வு காணுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் புத்துணர்ச்சிமிக்கதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஒரு கவலையாக இருந்தால், அதுக்குறித்த கவலையை உடனே விடுங்கள். ஏனெனில் இந்த மாதத்தில் இதயத்தைச் சுற்றி நீங்கள் போட்டிருந்த சுவர்களை உடைத்து, உங்கள் இதயத்தைத் திருடும் ஒருவனை நீங்கள் சந்திப்பீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply