உங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்… – Astrology In Tamil

உங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…

இந்த செய்தியைப் பகிர்க

ஜோதிடமும் நம்முடைய ராசிகளும் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த குறியீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

நம்மைப் பற்றியும் நம்முடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இது மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகிறது. குறிப்பாக, நம்முடைய பயம், நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றையும் ஜோதிடத்தால் கணித்துச் சொல்லிவிட முடியும்.

பயம்
பயம் என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு விஷயம். எனக்கு எதற்கும் பயமே கிடையாது என்று சிலர் சொல்லுவதெல்லாம் பொய். எல்லா உயிரினத்துக்கும் பயம் என்பது மிக முக்கிய உணர்வு. அதுதான் நம்மை ஒரு இடத்திலிருநு்து அடுத்த செயலை நோக்கி உந்தித் தள்ளும். ஒவ்வொரு ராசிக்கும் பயம் என்பது வேறுபடுகிறது. சிலருக்கு வாழ்க்கையை நினைத்து பயம். சிலருக்கோ சாவை நினைத்து பயம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சிலருக்கோ எதற்கெடுத்தாலும் பயம். இப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?… அப்போ வாங்க! உங்க ராசியை சொல்லுங்க… உங்களோட பயம் எதைப் பத்தினதுன்னு நாங்க சொ்லறோம்…

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். எதையும் ஆர்வத்துடன் செய்வார்கள். தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் நம்பி வேலை செய்யக்கூடியவர்கள். எந்த வேலை செய்தாலும் அதை நூறு சதவீதம் உண்மையாகவும் முழுமையாகவும் செய்யக்கூடிய நேர்மையாளர்களாக இருப்பார்கள். தங்களுக்கென்று நிறைய கனவுகளையும் குறிக்கோளையும் வைத்திருப்பார்கள். அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே தான் இருப்பார்கள். தங்களை ஒருபோதும் சோர்வாக உணரவே மாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் எந்த ஒரு காரியத்திலும் பின்வாங்குவது. இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே தோல்வி பயம் தான். தோல்வியை சந்திக்கவே கூடாது என்பதற்காக முழு மூச்சாக உழைப்பார்கள். தோல்வி என்னும் ஒன்றைத் தவிர வேறு எந்த விஷயத்துக்கும் இவர்கள் பெரிதாக பயப்படுவதில்லை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அழுத்தக்காரர்களாக இருப்பார்கள். அதேசமயம் மிக நேர்மையாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுடைய நேர்மை தான் இவர்களின் வாழ்க்கையில் யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு உன்னத நிலை கிடைக்கும். அதேபோல் மற்றவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிமையாகவும் நேர்ரைமயாகவும் இருக்கக்கூடியவர்கள். பிறரிடம் அன்பு செலுத்துவதால், மற்றவர்களின் பெரும் அன்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேர்மையானவர்கள் எந்த விஷயத்துக்கு மிகவும் பயப்படுவார்கள் தெரியுமா?… பொய் சொல்வதற்கு மிகவும் பயப்படுவார்கள். குறிப்பாக, தான் விரும்புகிறவர்களிடம் எக்காரணம் கொண்டு தெரியாமல் கூட பொய் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமும் பயமும் கொண்டிருப்பார்கள்.

மிதுனம்
பொதுவாக காதல் விஷயத்தில் மிதுன ராசிக்காரர்களைப் போல ரொமாண்டிக் பர்சனாலிட்டியை நீங்கள் பார்க்கவே முடியாது. மற்றவர்களைப் போல காதலை வைத்துக் கொள்ளாமல், அதாவது வெறும் பேச்சில் மட்டுமல்லாமல் தன்னுடைய செயலால் தங்களுடைய முழு காதலையும் வெளிப்படுத்துகிற ஆளாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் என்றாலே, காதலால் நிரம்பியவர்கள் என்று அர்த்தம். இவர்கள் பயப்படுகிற விஷயமும் காதல் தான். காதல் என்ற பெயரில் யாராவது இவர்களை ஏமாற்ற நினைத்தாலோ அல்லது ஏமாற்றினாலோ அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். காதலைத் தவிர வேறு எதற்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். வெற்றியை நோக்கி எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய கனவுகளை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும். அவர்களுடைய கனவு என்பது என்னவென்றால், தான் நினைக்கும் எல்லாமே தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான். தங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை தன்னுடைய மனக்கண்ணில் கனவு கண்டுகொண்டே அதை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். எப்போதெல்லாம் தங்களுடைய வெற்றி மீது லேசாக அவர்களுக்கு சந்தேகம் உண்டாகிறதோ, வெற்றியை நோக்கி ஓடும் போது, அதில் எப்போதாவது தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அளவு கடந்த அன்பை வெளிக்காட்டுபவர்களாக மற்றவர்களிடத்தில் திகழ்வார்கள். தங்களுடன் இருப்பவர்களுக்கு மிகவும் உண்மையாக நடந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடன் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் கூட்டமாகவும் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பதிலும் முழு மனதோடு இயங்குபவர்கள். கிட்டதட்ட நண்பர்கள் தான் இவர்களுடைய முழு உலகமும் என்றே சொல்லலாம். எப்போதும் ஏதேனும் ஒரு கூட்டத்துக்கு நடுவே தான் இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரையில், பயம் என்பது என்னவென்று தெரியுமா?… தன்மை தான்இவர்களுடைய மிகப்பெரிய பயம். தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனிமையைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார்கள்.

கன்னி
எந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டார்கள். அதேசமயம் மற்றவர்கள் மீது அன்போடும் நடந்து கொள்வார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பயம் என்ன தெரியுமா?… தவறு செய்வது தான். ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய வேண்டிய சூழல் வந்தாலோ அதை எதிர்கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.

துலாம்
நேர்மையாகவும் அதே சமயம் கனிவாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் தான் துலாம் ராசிக்காரர்கள். தகுதிக்கு மீறி எதையும் ஆசைப்பட மாட்டார்கள். இந்த குணம் இவர்களை மற்றவர்கள் முன்பாக, பெரும் மரியாதையை ஏற்படுத்தும். சுய நலம் இல்லாத, மற்றவர்களிடம் அன்பு செலுத்தக்கூடிய, அற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் தன்னுடைய அன்பை காட்டக்கூடியவர்கள்.முடிந்தவரை பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யக் கூடிய இவர்களுக்கு யாருடைய அன்பாவது போலியானது என்று தெரிந்தாலோ, அதேபோல், பொய்யான அன்பு செலுத்தும் நபர்களைக் கண்டால் இவர்கள் மிகவும் பயப்படுவதுண்டு.

விருச்சிகம்
கனவுகளில் மிதப்பவர்கள் தான் இந்த விருச்சிக ராசிக்காரர்கள். பரந்துபட்ட எண்ண ஓட்டங்களைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய உலகத்தை தானே வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருப்பீர்கள். தங்களுடைய தோற்றப் பொலிவும் அவற்றியும் தான் தங்களுடைய கனவுகளில் முதலிடத்தில் இருப்பவை. எப்போது அவர்களுடைய கனவுகள் நிறைவேறாமல் போகின்றனவோ, தன்னுடைய விருப்பத்தைப் போல தன்னால் எப்போது வாழ முடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் இவர்களுக்கு பயம் அதிகமாகிவிடும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளும், அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் இவர்கள் இப்படித்தான் என்று எந்த முன் முடிவுக்கு வர மாட்டார்கள். நண்பர்களிடம் மிகவும் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். நல்லவர், கெட்டவர், அழுக்கு, அழகு என நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டவராக இருப்பார்கள். இப்படி எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் அவர்களை யாராவது ஏற்க மறுத்தாலோ புறக்கணித்தாலோ அவர்கள் நிச்சயம் பயந்து விடுவார்கள். யாராவது புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மகரம்
எதையும் முகத்துக்கு நேராக சொல்லிவிடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுடைய நேர்மையும் இயல்பாக நடந்து கொள்ளும் குணமும் மற்றவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக இருக்கும். எதையும் மாற்றி மாற்றி பேசுபவர்களுடைய குணங்களை வெறுப்பவர்கள். இவர்குளைப் பொறுத்தவரையில், இவர்கள் என்ன செய்கிறார்களோ அதேபோல், இவர்களுக்கும் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுடைய பயமே அடுத்தவர்கள் ஏமாற்றுவதும் நேர்மை இல்லாமல் இருப்பதும் தான். அதேபோல் போலியாக யாராவது அன்பு செலுத்துவது போல், நடந்து கொண்டால் அவர்கள் மீது மிகவும் பயம் உண்டாகும்.

கும்பம்
எப்போதும் வெற்றியைக் கொண்டாடும் அன்பான மனிதர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் பயங்கர ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அதேபோல், எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதி புத்திசாலிகளான இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் மிக வேகமாக ஷார்ப்பாக புரிந்து கொள்வார்கள். வாழ்க்கையில் எப்போது எந்த நேரத்தில், எந்த ரூபத்தில் வாய்ப்புகள் தேடி வரும் என்பதை உண்மையாகவே தங்களுடைய அறிவுக்கூர்மையால், தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய திறமைக்கேற்ற வெற்றி எப்போதுமே அவர்களுக்குக் கிடைக்கும். இவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பயம் அவர்களுக்கு உண்டாகிற வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகிற போதுதான். தன்னுடைய வாய்ப்புகள் தான் தவற விடும் போதுதான் இவர்களுக்கு பயம் அதிகரிக்கிறது.

மீனம்
நேர்மையும் சுய மரியாதையும் கொண்டவர்களாக மீன ராசிக்காரர்கள் இருப்பார்கள். மற்றவர்களை உண்மையாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார்கள். தன் கண் முன்னே தான் அன்பு செலுத்துபவர்களுக்கு ஏதாவது துன்பம் உண்டாகும் போது, அதைக் கண்டு மிகவும் பயப்படுவார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply