பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு – Astrology In Tamil

பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு

இந்த செய்தியைப் பகிர்க

பிள்ளையார் நோன்பு வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.

நாம் ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல, திருக்கார்த்திகை நாளிலிருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்க வேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகை பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து கணபதியை வழிபட வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி வெல்லம் இணைந்த அரிசி மாவை நடுவில் வைத்து இழை எடுத்துக் கொள்வது வழக்கம்.

இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வாரிசு பிறக்கும் என்பதும் நம்பிக்கை. ஐந்து வகைப் பொரி என்பது – நெல் பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்ளுப் பொரி ஆகியன ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply