மே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே?… நீங்க மே மாசமா?… – Astrology In Tamil

மே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே?… நீங்க மே மாசமா?…

இந்த செய்தியைப் பகிர்க

மே மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. தங்களுடைய வாழ்க்கையை அழகாகவும் அதீத சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டார்கள். ஆனால் மற்றவர்களை போட்டி போட்டுக்கொண்டு ஜெயிக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள். மே மாதம் பிறந்தவர்கள் அழகான ரசனை கொண்டிருப்பார்கள். மிகக்குறைந்த நண்பர்களைக் கொண்டிருந்தாலும் நேர்மையான நட்பு கொண்டவர்களாக இருப்பார்கள். திறமையும் அறிவாற்றலும் உடையவர்களாக இருப்பார்கள்.

ஊக்கப்படுத்துதல்
தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு வெற்றியை நோக்கி ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். அமைதியும் பொறுமையுடனும் இருப்பவர்கள். அனுபவ முதிர்ச்சியோடு நடந்து கொள்பவர்கள். ஒரு செயலை மனதுக்குள் நினைத்துவிட்டால் அதை நிறைவேற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆர்வம்மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஈர்ப்புமிக்கவர்கள்
மே மாதத்தில் பிறந்தவர்கள் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிடக் கூடிய ஆற்றலும் கவர்ச்சியும் பெற்றிருப்பார்கள். இவர்களைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருந்துகொண்டே புகழ்ந்துகொண்டே இருக்கும். இதில் ரிஷபம் மற்றும் மிதுன ராசி்க்காரர்கள் கொஞ்சம் விதிவிலக்கு. அவர்களுக்கு கூட்டமென்றால் கொஞ்சம் அலர்ஜிதான். அவர்கள் தனியாக இருப்பதற்காக எப்போதும் வருத்தப்படுவதே இல்லை.

கனவு காண்பார்கள்
மே மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் கனவு காண்பார்கள். ஆனால் உண்மைக்குப் புறம்பான கனவுகளை காண்பதில்லை. எது தேவையோ எது அவசியமோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். எதையும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். எதையுமே முன் திட்டமிடல் இல்லாமல் செய்யமாட்டார்கள். அவர்களுடைய சௌகரியத்துக்கு ஏற்ப செயல்படக் கூடியவர்கள். எதையுமே தெளிவாகப் புரிந்துகொண்டு, எதிர்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள்.

ரசனைமிக்கவர்கள்
மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இயல்பாகவே கொஞ்சம் ரசனை அதிகம் கொண்டவர்கள். தன்னைச் சுற்றிலும் நிறைய அழகான பொருள்களை வாங்கி, அடுக்கி வைத்திருப்பார்கள். கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு வித்தியாசமான பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதில் பேரார்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் தேர்வு செய்வதில் தனித்தன்மையோடு செயல்படுவார்கள்.

அசைக்க முடியாதவர்கள்
யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். மிக உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், அதிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டார்கள். எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கலையும் பொருளாதாரமும்
அன்பான அழகான வாழ்க்கை மே மாதத்தில் பிறந்தவர்களுக்குக் கிடைக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். இவர்கள் எவ்வளவு அறிவுப்பூர்வமானவர்கள் என்பது நமக்குத் தெரியும். அதேபோல், பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கக் கூடியவர்கள்.கலை மற்றும் பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பயணங்கள்
மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புவார்கள். வெவ்வேறு மக்களுடைய கலை, பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுவிட்டால் அதற்காக கடினமாக உழைப்பார்கள்.

கடின உழைப்பு
மே மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.ஓய்வென்பதே அவர்களுக்கு இருக்காது. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை பட்டென வெளியே சொல்லிவிடுவது தான் இவர்களடைய பழக்கம். இது பலருகு்கும் இவர்களிடம் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.சிலருகு்கு அது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

சோம்பேறித்தனம்
பிறருடைய வேலையை எவ்வளவு வேகமாக விரைந்து முடிக்கிறார்களோ அதுபோல் தன்னுடைய வேலையில் இருப்பதில்லை. எதிலுமே கொஞ்சம் சுாம்பேறித்தனம் அதிகம்தான். அதேபோல், பிடிவாதமும் அளவுக்கு அதிகமான அன்பும் கொண்டிருப்பார்கள்.

கோபம்
மே மாதத்தில் பிறந்தவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல குணம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு முன் கோபமும் உண்டு. அதேசமயம் அந்த கோபம் உடனே பனிபோல் விலகிவிடுமே ஒழிய நீண்ட நேரம் நிலைத்திருக்காது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply