வருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை?… பரிகாரம் என்ன?… – Astrology In Tamil

வருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை?… பரிகாரம் என்ன?…

இந்த செய்தியைப் பகிர்க

நாம் சாதாரண மனிதர்கள். நம்மால் அதிகமாக அடிக்கிற வெயிலையோ மழையையோ எப்படி உடனே தடுத்து நிறுத்த முடியாதோ அதுபோல தான் பூமிக்கு மேலே நடக்கும் சில விஷயங்களையும் நம்மால் மாற்றிவிட முடியாது.

பூமியில் நாம் மரத்தை வெட்டுவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளை உண்டாக்குவதால் உலகில் ஏராளமான வானியல் மாற்றங்கள் உண்டாகும். ஆனால் பூமிக்கு மேலே அண்ட சராசரமாக உள்ள பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்களை நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. பிரசஞ்சத்தில் உண்டாகும் மாற்றங்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் நாம் ஏற்றுதான் ஆகவேண்டும். அவற்றில் சில நம்மை மகிழ்விக்கும். சிலவன கஷ்டத்தைக் கொடுக்கும். அப்படி பார்ப்பதற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் நிலா.

நிலாவைப் பார்த்தால் நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் தான். ஆனால் அதுவே கிரகணமாக வானில் தோன்றும் போது, பார்க்கக்கூடாது, தோஷங்கள் ஏற்படும் என பல ஆன்மீகக் காரணங்கள் கூறப்படுகின்றன.

கிரகணம்
சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும், அன்றைக்கு கிரகணம் முடியும் வரை சாப்பிடாமல், முடிந்த பின்பு தலைக்கு குளித்துவிட்டு, பின்னர் சாப்பிடுகிற வழக்கம் நம்மிடையே இருக்கிறது. இதற்கு ஏராளமான ஆன்மீகக் காரணங்களும் அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன. அப்படி நேரடியாக கிரகணத்தைப் பார்த்து விட்டால் அதற்கு சில பரிகாரங்கள் செய்வதும் உண்டு. அப்படி வருகிற சந்திர கிரணகத்தின் போது, யார் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதற்கான பரிகாரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

ரெட் மூன்
வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி வானில் சூப்பர் பிளட் மூன் தோன்றவிருக்கிறது. இந்த ஆண்டிலேயே பிளட் தோன்றப் போவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது. அன்று வரும் சூப்பர்மூன் தான் இந்த நூற்றாண்டில் மிக அதிக நேரம் வானில் தோன்றும் மூன் என்னும் சிறப்புக்குரியது. இதற்கு முன்பு வந்தது 58 நிமிடங்கள் 58 நொடிகள் வானில் இருந்தது. ஆனால் இப்போது வரப்போகும் சூப்பர் மூன் 1 மணிநேரம் 43 நிமிடங்கள் வரை வானில் நிலைத்திருக்கும்.

பிளட் மூன் என்பது என்ன?
அது ஏன் நிலா சிகப்பாகத் தோன்னுகிறது?… பிளட் மூன் எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா?…

பொதுவாக, சூரிய ஒளியானது நிலவின்போது படும்போது, அது உள்வாங்கிக் கொள்கின்ற ஒளிதான் இரவில் நிலாவின் ஒளியாக வெளியே தெரிகின்றது. ஆனால் இந்த பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலாவின் மீது படாமல் இருக்கும். பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு, அந்த கதிர்கள் நிலாவின் மீது விழும். அதனால் தான் சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கும். அதனால் தான் மற்ற சந்திர கிரகணங்களைப் போல, இந்த பூமியின் நிழலை நேரடியாகக் கடந்து செல்லும் வரை நம்முடைய பார்வைக்குத் தெரிகிறது.

சந்திர கிரகணம்
இப்படி வழக்கத்தை விடவும் அதிக நேரம் இந்த முறை சந்திர கிரகணம் இருக்கும் என்பதனால், இது மற்ற கிரகங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக சந்திர கிரகணம் மற்ற கிரகங்களைப் பாதிக்கும் என்பதால் இயல்பாகவே அதன் பாதிப்பு நமக்கும் இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகளை சந்திர கிரகணம் பாதிக்கும். அதனால் தான் பொதுவாக சந்திர கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்துப் பின், சாப்பிட வேண்டும் என்றும் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.

பாதிக்கப்போகும் ராசிகள்
இந்த முறை வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நிகழப் போகின்ற சந்திர கிரகணத்தில் சில குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே அதிகமாகப் பாதிப்படையப் போகின்றன. அதிலும் குறிப்பாக, கீழ்க்கண்ட மூன்று ராசிகள் மிக அதிகமாக இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 27 ஆம் தேதி நிகழப் போகின்ற சந்திர கிரகணம் மகரம், கும்பம், சிம்மம் என்னும் மூன்று ராசிகளையும் கொஞ்சம் அதிகமாக பாதிப்படும் என்று அறிஞர்களால் கணிக்கப்படுகிறது. அப்படி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் உண்டாகும் என்று பார்ப்போம். அதில் முதல் இரண்டு ராசிக்கும் பாதிப்பும் மூன்றாவது ராசிக்கும் முழுக்க முழுக்க நன்மையும் அதிர்ஷ்டமும் மட்டுமே உண்டாகும்.

கும்பம்
நிலாவும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் முந்திக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் இயல்பாகவே கலகலப்பான குணம் கொண்டவர்கள். பொதுவாக கலகலப்பான ஆன்மாவாக இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த சந்திர கிரகண கால கட்டத்தில் யாரிடம் பார்த்தாலும் சண்டை போடும் தொனியில் தான் .இருப்பீர்கள். எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த கிரகணத்தின் போது செவ்வாய் கிரகம் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தனக்குத்தானே கோபம் கொள்வதும் உண்டாகும்.

பரிகாரம் – இந்த காலகட்டத்தில் மனதை கொஞ்சம் அமைதியாக வைத்திருங்கள். யாரிடமாவது பிரச்னை உண்டாவது போல் இருந்தால், அவர்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

மகரம்
சந்திரனானது செவ்வாயை மிக வேகமாக பாதிக்கிறது. ஆனால் அது கொஞ்சம் இந்த முறை மந்தமாகவே இருக்கும். இந்த சந்திர கிரகணத்தின் போது செவ்வாயின் தாக்கம் உங்கள் மீது இருந்தாலும், பாதிப்பு எப்போதையும் விட கொஞ்சம் குறைவாகவே இருக்கப்போகிறது. உங்களுடைய கோபம், முன் யோசனை ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்தீர்கள் என்றால் அது வெற்றியில் சென்று முடியும்.

பரிகாரம் – உங்களுடைய போக்கில் செல்லுவதை கொஞ்சம் கவனமாக வைத்திருங்கள். நிதானமாக ஒரு விஷயத்தை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியுமோ அப்படி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு சாதகமான நாளாக நிச்சயம் அமையும்.

சிம்மம்
சந்திரனும் செவ்வாயும் ஒரே நேரத்தில் கும்ப ராசியைத் தான் பார்க்கிறது என்றாலும்கூட, அது உங்களுடைய ராசிக்கு எதிரான பலன்களையே உண்டாக்கும். ஆனாலும் பயப்படத் தேவையில்லை. இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரியனானது சிம்மம ராசியில்தான் வீற்றிருக்கிறது. இது உங்களுடைய பிறந்தநாள் சீசன். அதாவது உங்களுடைய ராசிக்கான பிறந்த காலகட்டம் இது. நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்களுக்குள் ஒரு புதுவித ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் இந்த கிரகண காலகட்டத்தில், உலகமே உங்கள் பின்னால் இருப்பதாகவும் உங்களையே உற்று நோக்குவதாகவும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.

இந்த சந்திர கிரகணத்தில் அதிர்ஷ்டம் கொட்டப் போவதும் உங்களுக்குத் தான். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உண்டாகும் ஆற்றலை வெற்றியின் பாதையில் சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய எதிர்கால வெற்றிக்கும்இது மிக சரியான தருணமாக இருக்கும். இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமாகவே எல்லா விஷயங்களும் அமையும். ஒட்டுமொத்த ஆற்றலையும் உங்களுடைய வெற்றிக்காகவும் குறிக்கோளுக்காகவும் மட்டுமே பயன்படுத்துங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply