சிவபெருமானின் 3 மகள்கள் யார் என்றும் அவர்களின் பிறப்பின் பின் இருக்கும் ரகசியங்களும் தெரியுமா? – Astrology In Tamil

சிவபெருமானின் 3 மகள்கள் யார் என்றும் அவர்களின் பிறப்பின் பின் இருக்கும் ரகசியங்களும் தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

இந்து மதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை பற்றி நாம் நன்கு அறிவோம். அழிக்கும் கடவுளான அவரே பரம்பொருள் ஆவார். அழிப்பது மட்டுமின்றி உலகில் மக்களை பாதுகாப்பதும், அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுப்பதும் என அனைத்து அசைவுகளும் இவரின் மேற்பார்வையிலேயே நடக்கிறது. சிவபெருமானை பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். ஏனெனில் பெரும்பாலானவர்கள் அறிந்தது சிவபெருமானுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மையல்ல.

ஆம் சிவபெருமானுக்கு கார்த்திகேயன், கணேசன் மற்றும் ஐயப்பன் மட்டுமின்றி மூன்று மகள்களும் இருக்கிறார்கள். சிவபெருமானின் மகன்கள் அளவிற்கு அவரின் மகள்கள் புகழ் பெறவில்லை. ஆனால் அவர்கள் இந்தியாவின் பல மூலைகளில் அவர்களை வழிபட்டுத்தான் கொண்டிருக்கின்றனர். இந்த பதிவில் சிவபெருமானின் மூன்று மகள்களை பற்றியும், அவர்களின் சிறப்புகளை பற்றியும் பார்க்கலாம்.

சிவபெருமானின் மகள்கள்
சிவபெருமானின் மகள்களின் பெயர்கள் அசோக சுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி. இந்த தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று. ஆனால் இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும், வேறு சில புராணங்களிலும் உள்ளது. அவற்றின்படி அவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான கதை உள்ளது.

அசோக சுந்தரி
சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள் அசோக சுந்தரி ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில் தனது சோகத்தை நீக்க உருவாக்கப்பட்டதாலும், மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு அசோக சுந்தரி என்று பெயர் வைத்தார்.

உப்பு சுவை
சிவபெருமான் பிள்ளையாரின் தலையை வெட்டியபோது அசோக சுந்தரி பயத்தில் உப்பு நிறைந்த ஒரு சாக்கில் ஒளிந்துகொண்டார். அப்போதிலிருந்து அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்புச்சுவை கொண்டதாக மாறியது. இவர் குஜராத்தில் அனைவராலும் வணங்கப்படுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இவரை பற்றி பலரும் அறியவில்லை.

ஜோதி
சிவபெருமானின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே அதன் அர்த்தத்தை விளக்குகிறது அவர் ஒளியின் வடிவம் என்று. இவர் ஒளியின் கடவுளாக அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின் இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதை என்னவெனில் அவர் சிவனின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்தார் என்றும் அவர் சிவபெருமானின் உடல் வெளிப்பாடு எனவும் கூறப்படுகிறார்.

இரண்டாவது கதை
இரண்டாவது கதை என்னவெனில் ஜோதி பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. இந்த ஜோதியானவர் ஜுவாலாமுகி என்னும் பெயரால் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில் வணங்கப்படுகிறார்.

வாசுகி
வாசுகி என்பவர் அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதியின் மகள் அல்ல. ஏனெனில் பாம்புகளின் கடவுளான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்தார். அதனால்தான் அவர் சிவனின் மகளாகவும், பார்வதியின் மகள் அல்ல எனவும் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்தபோது அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா என்ற ஒரு பெயரும் உள்ளது.

நிராகரிப்பு
இவரின் அதீத கோபத்தால் இவர் தன் தந்தை, சிற்றன்னையான பார்வதி, கணவர் என அனைவராலும் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக வணங்கப்படுகிறார். மேலும் இவர் பார்வதி தேவியை எப்பொழுதும் வெறுத்துக்கொண்டே இருந்தார். இவருக்கென்று எந்தவித வடிவமைக்கப்பட்ட உருவமும் இல்லை ஆனால் பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக்கூடியவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.


மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply